Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

வேகமாக நிரம்பும் ஆக்சிஜன் படுக்கைகள்: கொரோனா சிகிச்சை வசதிகளைக் கூட்டுமா தமிழக அரசு?

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை பரவல் வேகமெடுத்துள்ள நிலையில், மருத்துவமனையில் படுக்கைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. பல இடங்களின் ஆக்சிஜன் படுக்கைகள் கோரி மருத்துவமனைகளுக்கு வெளியே ஆம்புலன்ஸ்சுகளில் நோயாளிகள் காத்திருப்பதை காண முடிகிறது.

தமிழகத்தில் தற்போதைய நிலையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், கொரோனா சிகிச்சைக்காக ஒதுக்கப்பட்டுள்ள மொத்த படுக்கைகளின் எண்ணிக்கை 65,021. இவற்றில் தற்போது 35,381 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 29,640 படுக்கைகள் மீதமிருப்பதாகக் கூறுகிறது சுகாதாரத்துறை. இதில் ஆக்சிஜன் படுக்கைகளின் எண்ணிக்கை 30,635 என்கிறது சுகாதாரத்துறை.

இவற்றில் 12,520 நோயாளிகள் சிகிச்சையில் உள்ளதாகவும், மேலும் 18,115 ஆக்சிஜன் படுக்கைகள் தமிழகத்தில் காலியாக இருப்பதாகவும் சுகாதாரத்துறையின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

செய்திக்குறிப்பில் படுக்கைகள் காலியாக உள்ளதாகக் கூறப்படும் நிலையில், உண்மை நிலவரம் என்ன என்பது கேள்விக்குறி. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் காலியாக இருப்பதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்படும் நிலையில், பல இடங்களில் படுக்கைகள் கிடைக்காமல் நோயாளிகள் அவதிப்படுவதாக அவர்களின் உறவினர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

image

தலைநகர் சென்னையில் கொரோனா சிகிச்சைக்கு 11,894 படுக்கைகள் இருக்கின்றன. இவற்றில் ஆக்சிஜன் படுக்கைகள் என்பது அரசு மருத்துவமனைகளில் 2,629, தனியார் மருத்துவமனைகளில் 2,935 என மொத்தம் 5,564 படுக்கைகள் உள்ளன. இவற்றில், அரசிடம் 300 படுக்கைகளும், தனியாரிடம் 522 படுக்கைகளும் மட்டுமே மீதமுள்ளன. எனவே, சென்னையில் தற்போது மீதமுள்ள ஆக்சிஜன் படுக்கைகளின் எண்ணிக்கை அரசின் கணக்குப்படி வெறும் 822 மட்டுமே.

சென்னையில் தினசரி கொரோனா பாதிப்பு 6000-ஐ கடந்துள்ளது. தற்போதைய நிலையில் 33 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சுமார் 16,000 பேர் வீட்டுத்தனிமைப்படுத்தலில் உள்ளனர். மீதமுள்ள 17,000 பேரில் 50 சதவிகிதம் நபர்களுக்கு மேல் அதாவது சுமார் 8,000 பேருக்கு ஆக்சிஜன் படுக்கைகள் தேவைப்படக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.

தொற்று உறுதி செய்யப்பட்டு, மூச்சுத்திணறல் போன்ற பாதிப்பு உள்ள பலர், ஆக்சிஜன் படுக்கைகளுக்காக அவசர ஊர்தியிலேயே காத்திருக்கும் சூழலையும் அரசு மருத்துவமனைகளில் காணமுடிகிறது.

உடனடியாக சென்னையில் கூடுதலாக 10,000 ஆக்சிஜன் படுக்கைகளையும், தமிழகம் முழுவதும் கூடுதலாக 20,000 ஆக்சிஜன் படுக்கைகளையும் ஏற்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும், இல்லையெனில் ஆக்சிஜன் படுக்கைகள் இன்றி உயிரிழப்புகள் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்