கொரோனா தடுப்பூசி பணிகள் மந்தகதியில் நடப்பதாகக் கூறி அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சர் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கொரோனாவின் கோரப்பிடியில் உக்ரைன் நாடும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. 4.1 கோடி மக்கள்தொகை கொண்ட அந்நாட்டில் சுமாா் 21 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 48 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துவிட்டனர்.
இதையொட்டி கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போடும் பணி அந்நாட்டில் நடைபெற்று வருகிறது. ஆனால் பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் மந்த கதியாக நடப்பதாக அந்நாட்டில் விமர்சிக்கப்படுகிறது. இதுவரை 9,48,330 பேருக்கு முதல் தவணை தடுப்பூசி மட்டுமே செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், தடுப்பூசி நடவடிக்கைகள் மந்தகதியில் இருப்பதாகக் கூறி அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சர் மேக்சிம் ஸ்டெபானோவ் பதவிநீக்கம் செய்யப்பட்டார் .
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பின் அடிப்படையில் அவா் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். சுகாதாரத் துறை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், அந்தப் பதவிக்கான நபரை உக்ரைன் நாடாளுமன்றம் இன்று (வியாழக்கிழமை) தேர்வு செய்யலாம் என தகவல்கள் கூறுகின்றன.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்