Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

கேரளா: கருப்புப் பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளியின் கண்ணை அகற்றிய மருத்துவர்கள்

கேரளாவில் கருப்புப் பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டவரின் கண்ணை மருத்துவா்கள் அகற்றியுள்ளனர். அந்த நோய் மூளைக்கும் பரவக்கூடும் என்ற அச்சத்தால் கண்ணை அகற்றியதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் இரண்டாவது அலை மக்களை கடுமையாக பாதித்து வருகிறது. இதற்கிடையில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களில் சிலர் Mucormycosis என்ற கருப்பு பூஞ்சை தொற்று பாதிப்புக்கு ஆளாவது தெரியவந்துள்ளது. ஏராளமானோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது ஒரு அரிதான மற்றொரு தொற்று நோய் ஆகும். இந்த நோய் சைனஸ்கள், மூளை மற்றும் நுரையீரலை தாக்குகின்றன. இதுவும் உயிருக்கு ஆபத்தான நோய்தான். 
கொரோனா நோயாளிகளைப் பொறுத்தமட்டில், அவர்களுக்கு உயிரைக் காக்க தருகிற ஸ்டீராய்டு மருந்துகளால் இந்த நோய் தூண்டப்படலாம் என டாக்டர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில் கருப்புப் பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டவரின் கண்ணை மருத்துவர்களால் அகற்றப்பட்ட நிகழ்வு கேரள மாநிலம் மலப்புறத்தில் நடந்துள்ளது.
கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டம் திரூர் பகுதியைச் சோ்ந்தவர் அப்துல் காதர். 62 வயதான இவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டநிலையில், கடந்த ஏப்ரல் 25-ஆம் தேதி மஞ்சேரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் கொரோனா சிகிச்சையில் இருந்தபோது நிமோனியா காய்ச்சலாலும் பாதிக்கப்பட்டார். இரு பாதிப்புகளில் இருந்தும் குணமடைந்த அவருக்கு முகத்திலும், தலையிலும் கடுமையான வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் கோட்டக்கல்லில் உள்ள கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா். அங்கு அவர் கருப்புப் பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. 
இதையடுத்து அவர் கோழிக்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அப்துல் காதரின் மூளைக்கும் கருப்புப் பூஞ்சை பரவக்கூடும் என்ற அச்சத்தால் அவரின் இடது கண்ணை அறுவை சிகிச்சை செய்து அகற்றினர். அப்துல் காதருக்கு நீண்ட காலமாக நீரிழிவு பாதிப்பு இருப்பதாகவும், அவரின் கண் அகற்றப்பட்டு தற்போது மருத்துவமனையில் குணமடைந்து வருவதாகவும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்