Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

இந்தியர்கள் என்றால் கோமியம் குடிப்பவர்கள் என உலகத்தின் கண்ணோட்டம் மாறலாம் - சசிதரூர் கவலை

“கோமியம் குடிப்பது, சாணத்தில் குளிப்பது போன்ற செயல்களால் உலக மக்களிடையே இந்தியா என்றால் இப்படி தான் என்ற கண்ணோட்டம் மாறலாம்” - காங்கிரஸ் எம்பி சசி தரூர்

இந்தியாவில் கொரோனா தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. இந்நிலையில் சில மாநிலங்களில் சிலர் மாட்டு சாணத்தில் குளிப்பதும், பசுவின் கோமியத்தை குடிப்பது மாதிரியான செயல்களை செய்து வருகின்றனர். அப்படி செய்வதன் மூலம் கொரோனாவை விரட்டி அடிக்கலாம் எனவும் அவர்கள் கருதுகின்றனர். இந்நிலையில் அது உலக மக்களிடையே இந்தியா என்றால் இப்படி தான் என்ற கண்ணோட்டத்தையே மாற்றலாம் என ட்வீட் செய்துள்ளார் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர். 

“பாஜகவின் செயல்களால் உலக மக்களிடையே இந்தியா என்றால் இப்படி தான் என்ற கண்ணோட்டம் மாறலாம். பல தசாப்தங்களுக்கு முன்னர் பாம்பு பிடிப்பவர்கள் மற்றும் வித்தைகாரர்கள் நிறைந்த பூமியாக இந்தியா பார்க்கப்பட்டது. கடந்த 25 ஆண்டுகளாக மருத்துவர்கள் மற்றும் கணினி வல்லுனர்கள் நிறைந்த பகுதியாக இந்தியா பார்க்கப்படுகிறது. ஆனால் இப்போது இந்தியர்கள் என்றால் கோமியம் குடிப்பவர்களாகவும், மாட்டு சாணத்தில் குளிப்பவர்களாகவும் பார்க்கபடலாம்” என தெரிவித்துள்ளார் அவர். 

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் இந்த கருத்தை அவர் பதிவு செய்துள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்