Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

விரைவுச் செய்திகள்: குறைந்த தினசரி கொரோனா | யாஸ் புயல் | மஞ்சள் பூஞ்சை

24-ஆம் தேதிமுதல் தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் வெளியே வருவதைத் தடுக்க நடமாடும் வாகனங்கள்மூலம் வீடுகளுக்கே சென்று அத்தியாவசிய பொட்ருகளை வழங்க தமிழக அரசு ஏற்பாடு செய்திருக்கிறது. இந்நிலையில் ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைக்கிறதா? என அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்திக் கேட்டறிந்தார்.

  • ரேஷன் கடைகளில் பொருட்கள் விநியோகம்: முழு ஊரடங்கிலும் இன்று முதல் மதியம் 12 மணிவரை ரேஷன் கடைகள் திறந்திருக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் ஆம்பூர், நெல்லை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொருட்கள் வாங்க மக்கள் குவிந்தனர்.
  • ராஜகோபாலனுக்கு 8ஆம் தேதி வரை சிறை: பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜூன் 8 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க, மகளிர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ராஜகோபாலனமிடம் காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
  • செக்கு எண்ணெய் நிறுவனத்திற்கு தீ வைப்பு: கடலூரில் செக்கு எண்ணெய் நிறுவனத்திற்கு தீ வைத்துள்ளனர். தொழில்போட்டி காரணமாக தீ வைத்த நபரை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.
  • தமிழகத்திற்கு 100 கருப்பு பூஞ்சை மருந்து ஒதுக்கீடு: கருப்பு பூஞ்சை நோய்க்கு பயன்படுத்தப்படும் ஆம்போடெரிசின்-பி மருந்தை தமிழகத்திற்கு 100 குப்பிகள் மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
  • வணிகர் சங்கத்தினர் 1000 வாகனங்களில் விற்பனை: சென்னையில் வணிகர்களுடன் இணைந்து காய்கறி மற்றும் பழங்களை விற்க மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது. ஆயிரம் வாகனங்களில் வீதிதோறும் சென்று அத்தியாவசிய பொருட்கள் விற்கப்படும் என அறிவித்துள்ளது.
  • ஃபேஸ்புக், ட்விட்டருக்கு நாளை முதல் தடையா?: சமூக ஊடக நிறுவனங்களுக்கான புதிய விதிகள் நாளை முதல் நடைமுறைக்கு வருகிறது. விதிகளை பின்பற்றுவதில் மவுனம் காப்பதால் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவை முடக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
  • 2 லட்சத்திற்கு கீழ் குறைந்த தினசரி கொரோனா: இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்திற்கு கீழ் குறைந்தது. நாடு முழுவதும் 24 மணிநேரத்தில் ஒரு லட்சத்து 96ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
  • ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து - குழந்தை பலி: ஆந்திரா - ஒடிசா எல்லையிலுள்ள சிலேரு ஆற்றில் புலம்பெயர் தொழிலாளர்கள் சென்ற படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் 7 பேரை காணவில்லை. ஒரு குழந்தை சடலமாக மீட்கப்பட்டது.
  • யாஸ் புயல் - ஒடிசாவில் மழை: இன்று நண்பகல் யாஸ் அதி தீவிர புயலாக மாறுகிறது என வானிலை மையம் அறிவித்துள்ளது. நாளை கரையை கடக்கும் நிலையில் ஒடிசாவில் பலத்த மழை பெய்துவருகிறது.
  • அச்சுறுத்தும் 'மஞ்சள் பூஞ்சை' நோய்: கருப்பு மற்றும் வெள்ளை பூஞ்சை நோயை தொடர்ந்து, மஞ்சள் பூஞ்சை நோய் அச்சுறுத்தி வருகிறது. மஞ்சள் பூஞ்சை நோயால் உத்தரப்பிரதேசத்தின் காசியாபாத்தை சேர்ந்த ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார்.
  • 18+ வயதினருக்கு தடுப்பூசி - நேரில் பதிவு செய்யலாம்: 18 முதல் 44 வயதினர் கொரோனா தடுப்பூசிக்கு நேரடியாக மையங்களில் பதிவு செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இணையதளம் வழியாக மட்டுமின்றி நேரிலும் பதிவு செய்யலாம் என அறிவித்துள்ளது.
  • எரிமலை வெடிப்பில் 32 பேர் பலி: காங்கோ நாட்டில் எரிமலை வெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 32ஆக உயர்ந்துள்ளது. 170க்கும் அதிகமான குழந்தைகளை காணவில்லை என யுனிசெஃப் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்