Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் முழு ஊரடங்கு ஒன்றே தீர்வு - ராகுல் காந்தி

ஏழைகளுக்கு குறைந்தபட்ச வருமான உறுதி திட்டத்தை அறிவித்து ஊரடங்கை அமல்படுத்தலாம் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.  

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஏப்ரல் இறுதி முதல் இந்தியாவில் நாள்தோறும் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. மத்திய சுகாதாரத் துறை நேற்று வெளியிட்ட புள்ளிவிவரத்தின்படி, நாடு முழுவதும் தற்போது 34 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர். ஒரே நாளில் 3,417 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கிடையில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு மாநில அரசுகள் முழு ஊரடங்கு, பகுதியளவு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி நடைமுறைப்படுத்தி வருகின்றன. இந்நிலையில், கொரோனா பரவலை தடுத்திட நாடு முழுவதும் முழு ஊரடங்கு ஒன்றே தீர்வாக்கும் என்று நாடாளுமன்ற உறுப்பினரும், காங்கிரஸ் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மேலும் அவர், ஏழைகளுக்கு குறைந்தபட்ச வருமான உறுதி திட்டத்தை அறிவித்து ஊரடங்கை அமல்படுத்தலாம் எனவும் ஆலோசனை வழங்கியுள்ளார்.   இந்திய அரசின் செயலற்ற தன்மை பல அப்பாவி மக்களைக் கொல்கிறது எனவும் வேதனை தெரிவித்துள்ளார். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்