Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

தளர்வுகள் இன்றி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது ஏன்? - முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்

தளர்வுகள் இன்றி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது ஏன் என்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். முழு ஊரடங்கை விடுமுறை என கருதி பொதுமக்களில் சிலர் ஊர் சுற்றுவதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் கூறுகையில், 'தேவையான உணவுப் பொருட்களை வாங்கிக் கொள்ளவே சில தளர்வுகளை அறிவித்தோம். அந்த தளர்வுகளை பயன்படுத்தி அவசியமின்றி சிலர் வெளியே சுற்றுவதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர். விடுமுறை காலம் என நினைத்து சிலர் ஊர் சுற்றி வருகின்றனர். கடந்த ஓராண்டில் விலைமதிப்பற்ற மனித உயிர்களை இழந்துள்ளோம். பல குடும்பங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.

மருத்துவர்கள், செவிலியர்கள், முன்களப் பணியாளர்களின் துயரங்களை அளவிட முடியாது. மருத்துவத் துறையே மனரீதியான நெருக்கடியில் உள்ளது. உயிரை பற்றி கவலையின்றி அவர்கள் பணியாற்றுகின்றனர். முன்களப் பணியாளர்களுக்கு இதற்கு மேலும் அழுத்தத்தை கொடுக்க முடியாது. பள்ளி, கல்லூரி தொடர்ந்து மூடப்பட்டுள்ளதால் மாணவர்களுக்கு மனஅழுத்தம் ஏற்படக் கூடும். மாணவர்களுக்கு விரைவில் கல்வியையும் எதிர்காலத்தையும் உருவாக்கி தந்தாக வேண்டும்` என்றார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்