தற்போதைய நிலவரப்படி உலகம் முழுவதும் கொரோனா தொற்றுக்கு 1 கோடியே 35 லட்சத்து 31 ஆயிரத்து 292 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17.33 கோடியை தாண்டி உள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 17 கோடியே 33 லட்சத்து 11 ஆயிரத்து 801 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 15 கோடியே 60 லட்சத்து 53 ஆயிரத்து 332 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 37 லட்சத்து 27 ஆயிரத்து 177 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா தொற்றுக்கு தற்போது 1 கோடியே 35 லட்சத்து 31 ஆயிரத்து 292 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 88,172 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், துருக்கி, ரஷ்யா, இங்கிலாந்து, இத்தாலி, அர்ஜென்டினா, ஜெர்மனி ஆகியவை முதல் 10 இடங்களில் உள்ளன.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்