Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

நடிகர் ரஜினிகாந்த் உடல் பரிசோதனைக்காக வரும் 19ஆம் தேதி அமெரிக்கா பயணம்

நடிகர் ரஜினிகாந்த் வரும் 19ஆம் தேதி உடல் பரிசோதனைக்காக அமெரிக்கா செல்கிறார்.
 
அமெரிக்காவில் இரண்டாவது முறை சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட பின் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ள அங்கிருந்த மருத்துவர்கள் அறிவுறுத்தி இருந்தனர்.
 
இதன் காரணமாக 2019-ஆம் ஆண்டு ரஜினிகாந்த் அமெரிக்கா சென்று பரிசோதிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆனால் அந்த சமயத்தில் அரசியல் அறிவிப்பு காத்திருந்ததால் செல்ல முடியவில்லை. அதேபோல் கடந்த ஆண்டு கொரோனா தொற்று அதிகமானதால் பயணத் திட்டம் கைவிடப்பட்டது. ஆனால் இந்த முறை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட ரஜினிகாந்த் மருத்துவ பரிசோதனைக்காக வரும் 19ஆம் தேதி அமெரிக்கா செல்கிறார்.
 
தனி விமானத்தில் அமெரிக்கா செல்ல ரஜினிகாந்த் மத்திய அரசிடம் அனுமதி கேட்டிருந்தார். இதற்கான அனுமதி கிடைத்த நிலையில் அவர் அமெரிக்கா பயணிக்கிறார். அமெரிக்கா செல்லும் ரஜினிகாந்த் அங்கு சுமார் மூன்று வாரங்கள் தங்கியிருக்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்