Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

விரைவுச் செய்திகள்: டெல்லியில் முதல்வர் | குறைந்துவரும் தினசரி கொரோனா | யூரோ கோப்பை

பிரதமர் மோடியை சந்திக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி புறப்பட்டுச் சென்றார். நீட் தேர்வு, ஹைட்ரோ கார்பன், ஏழு பேர் விடுதலை உள்ளிட்ட பிரச்னைகள் குறித்துப் பேசவுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

மின் பயன்பாடு கணக்கீடு; இன்று தொடக்கம்: தமிழ்நாட்டில் இன்று முதல் மீண்டும் மின் பயன்பாடு கணக்கீட்டுப் பணிகள் தொடங்குகிறது. இனி வழக்கம்போல் தொகையை செலுத்தும் நடைமுறை பின்பற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பவானி ஆற்றில் வெள்ள எச்சரிக்கை: பில்லூர் அணையிலிருந்து 10ஆயிரம் கன அடி உபரி நீர் திறக்கப்பட்டது. இதனால் பவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இருதரப்பு மோதலால் பதற்றம்: நெல்லை முன்னீர்பள்ளத்தில் 3 பேரை அரிவாளால் வெட்டியதால், எதிர்தரப்பினர் வீடுகள், வாகனங்களை அடித்து நொறுக்கி தீ வைத்தனர். இதனால் அந்தப் பகுதியில் பதற்றம் நிலவுகிறது.

சென்னைக்கு கொண்டுவரப்பட்டார் சிவசங்கர் பாபா: போக்சோ வழக்கில் டெல்லியில் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபா சென்னைக்கு அழைத்து வரப்பட்டார். சென்னைக்கு கொண்டுவரப்பட்ட சிவசங்கர் பாபாவிடம் சிபிசிஐடி அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணைக்குப் பின்னர், செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

பப்ஜி மதனின் மனைவிக்கு நீதிமன்றக் காவல்: பப்ஜி மதனின் மனைவி கிருத்திகாவை வரும் 30ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மதனின் செல்போன், கணினி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. அவருடைய ஆடம்பரக் கார்களை கைப்பற்றவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கோவை, ஈரோட்டில் குறையாத பாதிப்பு: தமிழ்நாட்டில் நான்காவது நாளாக 300க்கும் கீழ் கொரோனா உயிரிழப்புகள் பதிவாகியிருக்கிறது. தினசரி கொரோனா பாதிப்பும் 11 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. ஆனால் கோவை, ஈரோட்டில் ஆயிரத்துக்கும் மேல் பதிவாகி வருகிறது.

வண்டலூர் பூங்காவில் மேலும் ஒரு சிங்கம் பலி: வண்டலூர் உயிரியல் பூங்காவில் மேலும் ஒரு சிங்கம் கொரோனாவால் உயிரிழந்தது. 13 வயதான பெண் சிங்கம் ஒன்றும் கவலைக்கிடமாக உள்ளது.

DAP உரத்திற்கு மானியம் அதிகரிப்பு: விவசாயிகளுக்கான DAP உர மானியம் மூட்டைக்கு 700 ரூபாய் அதிகரிப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

ராஜ்யசபா எம்பி தேர்தல் அறிவிப்பில் தாமதம் ஏன்?: 3 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நடத்துவதில் தாமதம் ஏற்பட்டு வருவதாக தேர்தல் ஆணையம் மீது திமுக எம்.பி. டி.ஆர்.பாலு குற்றம் சாட்டியுள்ளார்.

இத்தாலி, வேல்ஸ், ரஷ்ய அணிகள் வெற்றி: யூரோ கோப்பை கால்பந்து தொடரில் சுவிட்சர்லாந்தை இத்தாலி அணி எளிதாக வென்றது. அதேபோல் வேல்ஸ், ரஷ்ய அணிகளும் வெற்றிபெற்றது. இதில் அடுத்த சுற்று வாய்ப்பை துருக்கி அணி இழந்தது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்