Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

டெல்லியில் தயாராகும் திமுக அலுவலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

தலைநகர் டெல்லி சென்றடைந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு திமுக கட்சி அலுவலக கட்டுமானப் பணிகளை பார்வையிட்டார்.
 
நாடாளுமன்ற இரு அவைகளிலும் சேர்த்து 7 எம்.பி.க்களைப் பெற்று இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட மத்திய, மாநில கட்சிகளுக்கு டெல்லியில் அலுவலகம் கட்டுவதற்கு இடம் வழங்க மத்திய அரசு கடந்த 2006 ஆம் ஆண்டு முடிவு செய்தது.
அதன்படி டெல்லியில் உள்ள தீன் தயால் உபாத்தியாயா மார்க் பகுதியில், திமுக கட்சி அலுவலகம் கட்ட கடந்த 2013-ஆம் ஆண்டு இடம் ஒதுக்கப்பட்டது. டெல்லியில் உள்ள பா.ஜனதா தலைமை அலுவலகம் அருகில் ஒதுக்கப்பட்ட இடத்தில் தி.மு.க. அலுவலக கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழக முதலமைச்சராக பதவியேற்ற பின்னர், முதன்முறையாக டெல்லி சென்றுள்ள மு.க.ஸ்டாலின், அங்கு கட்டப்பட்டு வரும் திமுக கட்சி அலுவலகத்தை பார்வையிட்டார். அவருடன் அமைச்சர் துரைமுருகன், டி.ஆர்.பாலு, கனிமொழி, டெல்லி சிறப்பு பிரதிநிதி விஜயன் உள்ளிட்டோர் இருந்தனர். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்