கொரோனா மூன்றாவது அலையை சமாளிக்க மருத்துவர்களுக்கு உதவுவதற்காக 5 ஆயிரம் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க டெல்லி அரசு முடிவு செய்துள்ளது.
கொரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ள பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை டெல்லி அரசு மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு உதவுவதற்காக 5 ஆயிரம் இளைஞர்களுக்கு மருத்துவ உதவியாளர் பயிற்சி வழங்க முடிவெடுத்துள்ளது. வரும் 28ஆம் தேதி முதல் கட்டமாக 500 இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
18 வயதுக்கு மேற்பட்ட, 12ஆம் வகுப்பை நிறைவு செய்தவர்களுக்கு இந்த மருத்துவ உதவியாளர் பயிற்சி வழங்கப்படவுள்ளது. முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் இணையதள வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு உரிய பயிற்சிகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு வார பயிற்சிக்கு பின்னர் இவர்கள் பணியமர்த்தபடுவார்கள் என்றும் அவர்கள் எவ்வளவு நாள் பணி செய்கிறார்களோ அதற்கேற்ப ஊதியம் வழங்கப்படும் என்றும் டெல்லி அரசு கூறியுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்