யூரோ கால்பந்து தொடரில் பிரான்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மேட்ஸ் ஹம்மல்ஸ் அடித்த சுய கோல் காரணமாக ஜெர்மனி அணி 0-1 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. யூரோ கால்பந்து வரலாற்றில் ஜெர்மனி தனது முதல் ஆட்டத்தில் தோல்வியை சந்திப்பது இதுவே முதன்முறை.
யூரோ கால்பந்து தொடரில் எஃப் பிரிவில் இடம் பெற்றுள்ள ஜெர்மனி - பிரான்ஸ் அணிகள் முனிச் நகரில் நேற்று மோதின. 15-வது நிமிடத்தில் அன்டோனி கிரீஸ்மான் அடித்த கிராஸை பால் போக்பா தலையால் முட்டி கோல் அடிக்க முயன்றார். ஆனால் பந்து கோல் கம்பத்துக்கு மேல் சென்று ஏமாற்றம் அளித்தது.
0 கருத்துகள்