பெரம்பலூரில் ஊரடங்கால் வருமானமின்றி தவித்த 40-கலைக்கூத்து கலைஞர்களின் குடும்பங்களுக்கு புதியதலைமுறை துளிர்க்கும் நம்பிக்கை மூலம் ரூ 50-ஆயிரம் மதிப்பீட்டில் நிவாரணப்பொருட்களை அஸ்வின்ஸ் குழுமத்தலைவர் கணேசன் வழங்கினார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கால் பலர் வேலையிழந்து பெரும் சிரமப்பட்டு வரும் நிலையில், சிறுவாச்சூர் அருகில் உள்ள ராமலிங்கம் நகரில் குடியிருக்கும் 40-கலைக்கூத்து கலைஞர்களின் குடும்பங்கள், கொரோனா ஊரடங்கால் வருவாய் இன்றி சிரமப்பட்டு வந்தனர். இவர்கள் தங்களுக்கு அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்க வழிவகை செய்யுமாறு புதியதலைமுறை துளிர்க்கும் நம்பிக்கையை தொடர்பு கொண்டனர்.
அதன் அடிப்படையில் தற்போது வருவாய் இன்றி தவித்த 40 கலைக்கூத்து கலைஞர்களின் குடும்பங்களுக்கு புதியதலைமுறையின் துளிர்க்கும் நம்பிக்கை மூலம், அஸ்வின்ஸ் குழுமம் சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன. நிவாரணப் பொருட்களை அஸ்வின்ஸ் குழுமத்தின் தலைவர் கே.ஆர்.வி கணேசன் வழங்கினார். நிவாரணப் பொருட்களை பெற்றுக்கொண்ட கலைக்கூத்து கலைஞர்கள் புதியதலைமுறை தொலைக்காட்சிக்கும் அஸ்வின்ஸ் நிர்வாகத்திற்கும் நன்றி தெரிவித்தனர்.
- புதிய தலைமுறையின் 'துளிர்க்கும் நம்பிக்கை' உதவி மையத்துக்கு வந்துகொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான அழைப்புகளில் சமீபத்தில் வந்த கோரிக்கைகள் இவை. இந்த எளியவர்களை கரை சேர்க்க உதவும் வகையில் எங்களுடன் நீங்கள் இணைய விரும்பினால் 9150734555, 9150737555 என்ற எண்களைத் தொடர்புகொள்ளுங்கள்.
கொரோனா பேரிடரில் உதவி தேவைப்படுவோருக்கு நீங்கள் அளிக்கும் உதவிகளை சரியாக சென்று சேர்வதற்கு உறுதியான அத்தனை பணிகளையும் களத்தில் இருந்து நம் குழுவினர் செய்து வருகிறார்கள்.
உதவி நாடுவோருக்கு தங்களால் இயன்றதை தொடர்ந்து செய்துவரும் நல் உள்ளங்களுக்கு நன்றியும் அன்பும். இந்த முன்னெடுப்பு குறித்து விரிவாக அறிய > எளியவர்களின் இருள் நீங்க... 'புதிய தலைமுறை' முன்னெடுப்பில் 'துளிர்க்கும் நம்பிக்கை'
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்