இந்தியாவில் 8-வது நாளாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 60,471 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை நாளுக்குநாள் குறைந்துவரும் நிலையில் இதுவரை பாதித்தோர் எண்ணிக்கை 2,95,10,410லிருந்து 2,95,70,881ஆக உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் 80 ஆயிரம், நேற்று 70 ஆயிரமாக இருந்த பாதிப்பு இன்று 60 ஆயிரமாக குறைந்திருக்கிறது.
இந்தியாவில் ஒரேநாளில் 1,17,525 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,81,62,947லிருந்து 2,82,80,472ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 95.64%. உயிரிழப்பு விகிதம் 1.28%ஆக உள்ளது.
இந்தியாவில் ஒரேநாளில் கொரோனாவுக்கு 2,726 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் இந்தியாவில் கொரோனாவில் இறந்தோர் எண்ணிக்கை 3,74,305லிருந்து 3,77,031ஆக உயர்ந்துள்ளது.
நாடுமுழுவதும் கொரோனா பாதித்து சிகிச்சைபெறுவோர் எண்ணிக்கை 9,13,378ஆக குறைந்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்