கொரோனா மூன்றாவது அலையால் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படாது என, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
கொரோனா இரண்டாவது அலை பாதிப்பு பற்றி ஐந்து மாநிலங்களின் சில பகுதிகளில் உலக சுகாதார அமைப்புடன் இணைந்து எய்ம்ஸ் ஆய்வு நடத்தியது. இதில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களைவிட, 18 வயதுக்குட்பட்டவர்களிடம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது தெரியவந்துள்ளது.
கொரோனா இரண்டாவது அலையில் அதிகம் பாதிக்கப்பட்ட டெல்லி, ஹரியானா, உத்தரப்பிரதேசம், திரிபுரா மாநிலங்களின் சில பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளிலும் குழந்தைகளிடம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது. எனவே, மூன்றாவது அலையால் குழந்தைகள் பாதிக்கப்பட்டாலும், அது அறிகுறியில்லாத பாதிப்பாகவே இருக்கும் என்றும் எய்ம்ஸ் தெரிவித்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்