தொடர் வருவாய் இழப்பு காரணமாக நாடு முழுவதும் உள்ள அசையா சொத்துகளை ஏலம் விடுகிறது ஏர் இந்தியா.
இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் இணைக்கப்பட்டதில் இருந்து, ஏர் இந்தியா நிறுவனம் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. பல ஆண்டுகளாக நஷ்டம் சேர்ந்து, தற்போது அது 60 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. எனவே கடும் நஷ்டத்தில் இயங்கும் ஏர் இந்தியா நிறுவனத்தை தனியார் மயமாக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், தொடர் வருவாய் இழப்பு காரணமாக நாடு முழுவதும் உள்ள அசையா சொத்துகளை ஏலம் விட ஏர் இந்தியா நிறுவனம் முடிவெடுத்துள்ளது. டெல்லி, கொல்கத்தா, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட 10 நகரங்களில் உள்ள 14 அசையா சொத்துகளை விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏர் இந்தியா நிறுவன அலுவலங்கள், ஊழியர்களுக்கான குடியிருப்புகளை வாங்க விரும்புவோர் ஜூலை 8, 9 ஆகிய தேதிகளில் www.airindia.in இணையதளத்தில் நடக்கும் ஏலத்தில் பங்கேற்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்