Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள்?- முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை

தமிழ்நாட்டில் ஊரடங்கு தளர்வுகள் தொடர்பாக மருத்துவ வல்லுநர்கள் மற்றும் மருத்துவத்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.

தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 28ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வரும் நிலையில், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். தலைமைச் செயலகத்தில் காலை 11 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு, மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனர்.

image

ஊரடங்கை மேலும் நீட்டிக்கலாமா? அல்லது கூடுதல் தளர்வுகள் அளிக்கலாமா? என்பது குறித்து மருத்துவக் குழுவினரிடம் கருத்துகளை முதலமைச்சர் கேட்டறிகிறார். தொற்று பாதிப்பு எண்ணிக்கை அடிப்படையில், மாவட்டங்கள் 3 வகைகளாக பிரிக்கப்பட்டு கடந்த வாரம் தளர்வுகள் அளிக்கப்பட்டன. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மட்டும் தற்போது நகரப் பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், கொரோனா பரவல் குறைந்துள்ள மற்ற 23 மாவட்டங்களிலும் அனுமதிக்கலாமா என ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது.

கோவை, ஈரோடு, சேலம் உள்ளிட்ட 11 மாவட்டங்களிலும் தொற்று குறைந்து வருவதால், அங்கேயும் கூடுதல் தளர்வுகள் அளிப்பது பற்றி ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு முடிவு எடுக்கப்படவுள்ளது. எனினும் இந்த மாவட்டங்களில் பேருந்து சேவைக்கு அனுமதி அளிக்கப்படாது என கூறப்படுகிறது. தொற்று குறைவாக உள்ள மாவட்டங்களில் சிறிய ஜவுளிக்கடைகள் மற்றும் நகைக்கடைகளை திறக்க இம்முறை அனுமதி அளிக்கப்படாலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மருத்துவ வல்லுநர்கள் குழுவுடனான ஆலோசனையைத் தொடர்ந்து, தளர்வுகள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்