தமிழகத்தில் ஜூன் 7-ல் முடிவடையும் ஊரடங்கை தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்க மருத்துவ வல்லுநர் குழு பரிந்துரைத்துள்ளது.
தமிழகத்தில் ஊரடங்கு வருகிற 7-ஆம் தேதி காலை 6 மணியுடன் முடிவடையும் நிலையில் ஊரடங்கை நீட்டிக்கலாமா அல்லது நோய்த்தொற்று குறைவாக உள்ள மாவட்டங்களில் சில தளர்வுகளை அளிக்கலாமா என்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனையில் ஈடுபட்டார். தலைமைச் செயலாளர், சுகாதார செயலாளர், டிஜிபி உள்ளிட்டோர் பங்கேற்ற அந்த ஆலோசனையில் ஜூன் 14ஆம் தேதிவரை ஊரடங்கை நீட்டிக்க முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு நாளை வெளியாகும் எனவும் கூறப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று அதிகமுள்ள மேற்கு மற்றும் டெல்டா மாவட்டங்களில் மேலும் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தவும், அதேபோல் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்துவரும் மாவட்டங்களில் சில தளர்வுகளை அளிக்கவும் முடிவுசெய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால் 14ஆம் தேதிவரை பொதுபோக்குவரத்து அனுமதிக்கப்பட மாட்டாது என்றும், இ-பதிவு முறை தொடரும் என்றும் கூறப்படுகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்