மத்திய அரசு கொண்டு வந்த டிஜிட்டல் மீடியா ஒழுங்குமுறை விதிகளை ஏற்றுக் கொள்ள நீண்ட இழுபறிக்குப் பின் டிவிட்டர் சம்மதம் தெரிவித்துள்ளது.
புதிய சட்டங்களின்படி இந்தியாவில் எழும் புகார்களை கவனித்து நடவடிக்கை எடுப்பதற்காக இடைக்கால குறைதீர்ப்பு அதிகாரியாக தர்மேந்திர சதுர் என்பவரையும் டிவிட்டர் நியமித்துள்ளது. அதே நேரம் ஆட்சேபனைக்குரிய கருத்துகளை நீக்குதல், புகார்களை கையாளுவது, அரசின் சட்டத்திட்டங்களுக்கு ஏற்ப நடவடிக்கை எடுப்பது ஆகியவற்றுக்கு அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என புதிய சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
மேலும், அவர்கள் இந்தியர்களாக இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அதிகாரிகளை நியமிப்பது குறித்து டிவிட்டரிடம் இருந்து இதுவரை எந்த தகவலும் இல்லை.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்