Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

கேரளாவில் 15 பேருக்கு ஜிகா உறுதி: எல்லையில் வலுக்குமா தமிழக அரசின் தடுப்பு நடவடிக்கைகள்?

கேரளாவில், இன்று காலை கர்ப்பிணி ஒருவருக்கு ஜிகா வைரஸ் உறுதிப்படுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து மேலும் சிலரிடம் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டதில், மேலும் 14 பேருக்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதைத்தொடர்ந்து, தடுப்பு நடவடிக்கைகளில் கேரள  சுகாதாரதுறை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டம் தமிழக - கேரள  எல்லையான செறுவார கோணம் பகுதியை சேர்ந்த 24 வயது கர்ப்பிணி பெண், திருவனந்தபுரம் தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர் காய்ச்சல் இருந்ததால் டெங்கு, சிக்கன்குனியா, கொரோனா ஆகியவற்றுக்கான சோதனைகள் செய்யப்பட்டது. அப்போது அவை அனைத்தும் நெகட்டிவ் என வந்துள்ளது. தொடர்ந்து காய்ச்சல் குறையாததால், சந்தேகத்தின் பேரில் கோயம்பத்தூர் ஆய்வகத்துக்கு அந்த பெண்ணின் ரத்த மாதிரிகள் அனுப்பப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. அங்கு அவருக்கு ஜிகா வைரஸ் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

Zika virus confirmed in pregnant woman in Kerala, more cases suspected | The News Minute

இதைத்தொடர்ந்து அந்தப் பெண்ணின் உறவினர்கள், அவர் தனது மருத்துவ சிகிச்சைக்காக தங்கி இருந்த மருத்துவமனை அருகே உள்ள வீடுகள் மற்றும் அந்த வீட்டருகே இருந்த  குடியிருப்பு பகுதிகளில் இருந்த பிற நபர்களுக்கு ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, சோதனை செய்யப்பட்டது. அந்த சோதனை முடிவுகளில், தற்போது மேலும் 14 பேருக்கு ஜிகா வைரஸ் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்களைத் தொடர்ந்து, மேலும் தமிழக கேரள எல்லை செறுவாறகோணம் பகுதியில் 30-க்கும் மேற்பட்டவர்களிடம் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. அதுபோல கேரள சுகாதாரத்துறை சார்பில், நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ஜிகா, குமரி மாவட்டத்தில் பரவாமல் தடுக்க தமிழக  சுகாதாரத்துறை சார்பில் எல்லை பகுதிகளில் நோய்தடுப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வலுவடைந்துள்ளது.

- மனு

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்