இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை முடிவுக்கு வரவில்லை என்பதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என நிதி ஆயோக் உறுப்பினர் மருத்துவர் வி.கே.பால் அறிவுறுத்தியுள்ளார்.
நாட்டின் கொரோனா பாதிப்பு தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் சார்பில் டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. மத்திய சுகாதாரத்துறை இணைச்செயலாளர் லவ் அகர்வால், நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய வி.கே.பால், ''கொரோனா 2-வது அலை இந்தியாவில் இன்னும் ஓயவில்லை. குறிப்பாக மணிப்பூர், ஒடிசா உள்ளிட்ட 6 மாநிலங்களில் தொற்று பரவல் என்பது மீண்டும் அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக மத்திய அரசின் உயர்மட்ட குழு மாநிலங்களுக்கு நேரடியாக களமிறக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் 12 மாநிலங்களில் மொத்தம் இதுவரை 56 நபர்கள் உருமாறிய டெல்டா பிளஸ் வகை வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்'' என்றார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்