Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீட்டை உறுதி செய்க: இபிஎஸ் கோரிக்கை

நீட் தேர்வில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் 7.5% இட ஒதுக்கீடு கிடைக்கப்பெறுவதில் இடையூறு ஏற்படுத்தாமல், நீட் தேர்வுக்கு உரிய பயிற்சிகள் வழங்க வேண்டும் என தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "இந்த ஆண்டு நீட் தேர்வு நடைபெறுமா? என முதல்வர் அவர்களை நேரடியாகவும், ஊடகங்கள் மூலமும் பலமுறை வலியுறுத்தியும் பதில் சொல்லாமல் காலம் தாழ்த்தியதின் விளைவு; இன்று மாணவர்களின் மருத்துவக்கனவு கேள்விக்குறியாகி உள்ளது. எப்போதும் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாதது இந்த அரசு.

அதிமுக அரசு செயல்படுத்திய "நீட் தேர்வில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் 7.5% இட ஒதுக்கீடு கிடைக்கப் பெறுவதில் இடையூறு ஏற்படுத்தாமல்,தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு அதிமுக அரசு அளித்ததுபோல உரிய பயிற்சிகள் வழங்கி உறுதுணையாக இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்