மலை கிராமத்திற்கு பாதை இல்லாததால் 2 கிலோ மீட்டர் தூரம் டோலி கட்டி தூக்கிவரப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு ஆட்டோவில் ஆண் குழந்தை பிறந்தது.
வேலூர் மாவட்டம் அணைகட்டு தொகுதிக்குட்பட்ட ஊசூர் அடுத்து அமைந்துள்ளது குருமலை மலை கிராமம். இங்கு பல குக்கிராமங்கள் உள்ள நிலையில் மலை கிராமத்திற்கு இதுவரை சாலை வசதி இல்லை. மலை மீது அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களும் இல்லை. இதனால் மக்கள் பிரசவம் உட்பட பல சிகிச்சைக்காக டோலிகட்டி தூக்கி வருவதையே வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்நிலையில் நேற்று இரவு குருமலை பகுதியை சேர்ந்த ராமு என்பவரின், கர்ப்பிணி மனைவியான பவுனு (37)-க்கு திடீர் வலி ஏற்படவே கிராம மக்கள் டோலி கட்டி அவரை மலை பகுதியில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தூரமுள்ள அடிவாரத்திற்கு கரடுமுரடான பாதை வழியே தூக்கி வந்துள்ளனர். மலை அடிவாரத்தில் காத்திருந்த ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்கு செல்லும்போது பவுனுக்கு ஆட்டோவிலேயே ஆண் குழந்தை பிறந்துள்ளது.
பின்னர் மண் சாலையில் காத்திருந்த அரசு ஆம்புலன்சில் தாய் மற்றும் சேய்க்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் இருவரும் ஊசூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்