Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

தடுப்பூசி பற்றாக்குறையால் இன்று முகாம்கள் ரத்து: சென்னை மாநகராட்சி

சென்னையில் 3 நாட்களுக்குப் பிறகு கொரோனா தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கிய நிலையில், தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக இன்று முகாம்கள் நடைபெறாது என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
 
மத்தியத் தொகுப்பில் இருந்து போதிய அளவு தடுப்பூசிகள் வராததால் சென்னையில் கடந்த 5, 6 மற்றும் 7ஆம் தேதிகளில் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் செயல்படவில்லை. 3 நாட்களுக்குப் பிறகு நேற்று 45 சிறப்பு முகாம்களில் தடுப்பூசி போடப்பட்டது. இந்த நிலையில் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக இன்று, சென்னையில் தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தப்படுகிறது. மீண்டும் எப்போது சிறப்பு முகாம்கள் செயல்படும் என தடுப்பூசி வந்த பிறகு அறிவிப்பு வெளியிடப்படும் சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 
சென்னை போன்று மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக முகாம்கள் செயல்படாததால், மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். இதனிடையே டெல்லியில் முகாமிட்டுள்ள தமிழக மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், இன்று மத்திய அரசின் பல்வேறு அதிகாரிகளைச் சந்தித்து, கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட தமிழகம் சார்ந்த மருத்துவ தேவைகள் குறித்து நேரில் வலியுறுத்துவார் எனத் தெரிகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்