Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

கொரோனாவை தொடர்ந்து கேரளாவை அச்சுறுத்தும் 'ஜிகா' வைரஸ்: கர்ப்பிணிக்கு பாதிப்பு உறுதி

(கோப்பு புகைப்படம்)
கேரளாவில் கொரோனாவின் பாதிப்பு குறையாத நிலையில், முதல்முறையாக 'ஜிகா' வைரஸ் பாதிப்பும் கண்டறியப்பட்டுள்ளது.
 
கேரளாவில் கடந்த மாத தொடக்கத்தில் 19 ஆயிரமாக இருந்த தினசரி கொரோனா பாதிப்பு, படிப்படியாக குறைந்து வந்தது. ஜூலை மாதத்தில் கடந்த ஐந்தாம் தேதி தவிர பிற நாள்களில் சராசரியாக 12 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதியானது. கொரோனா பரவல் இன்னும் கட்டுப்படுத்தப்படாத நிலையில், கேரளாவில் முதல்முறையாக 24 வயது பெண் ஒருவருக்கு 'ஜிகா' வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
பாறசாலை என்ற இடத்தைச் சேர்ந்த அவர், திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்காக சேர்க்கப்பட்டபோது, 'ஜிகா' வைரஸ் பாதிப்புக்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டது. அவரிடம் சேகரிக்கப்பட்ட மாதிரிகளை புனேவில் உள்ள தேசிய நுண்ணுயிரிகள் ஆய்வு மையத்தில் ஆய்வு செய்தபோது 'ஜிகா' வைரஸ் பாதிப்பு உறுதியானது. குழந்தையை பெற்றெடுத்த அந்தப் பெண்ணும் குழந்தையும் தற்போது நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அந்தப் பெண்ணின் தாயார் உள்ளிட்ட 13 பேரின் மாதிரிகள் புனே ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்