Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

பொது இடங்களில் சுவரொட்டிகள் அகற்றம்: புதிய திட்டத்தை கையிலெடுத்த சென்னை மாநகராட்சி

பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களை அகற்றி, தூய்மைப்படுத்தும் புதிய திட்டத்தை கையில் எடுத்துள்ளது சென்னை மாநகராட்சி.
 
சென்னை மாநகரை தூய்மையாகவும், அழகாகவும் பராமரிக்க மாநகராட்சி நிர்வாகம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எனினும் அரசு கட்டடங்கள், பேருந்து நிறுத்த நிழற்குடைகள், பாலங்கள் உட்பட பொது இடங்களில் ஒட்டப்படும் சுவரொட்டிகள் மாநகரின் அழகினை சீர்குலைக்கும் வகையில் உள்ளதால், அதனை அகற்றும் பணியில் இறங்கியுள்ளது மாநகராட்சி நிர்வாகம்.
 
சுவரொட்டிகள் இல்லாத சென்னை என்ற இலக்கை எட்ட பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு மாநகராட்சி நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. சுவரொட்டிகளை அகற்றுவது தொடர்பாக பொதுமக்கள் 1913 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சுவரொட்டிகளை அகற்றிய பிறகு அந்த சுவரினை அழகாக வர்ணம் பூசி மெருகேற்றும் முயற்சியிலும் மாநகராட்சி ஈடுபட்டுள்ளது.
 
சுவரொட்டிகள் நீக்கப்படுவதுடன், வர்ணம் பூசி அழகுபடுத்தும் மாநகராட்சி நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை, சிங்கார சென்னை திட்டத்திற்கு அச்சாரமிடுவதாக அமைந்துள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்