Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

'பசி என்னும் பேரிடரை நோக்கிச் செல்லும் உலகம்' - தரவுகள் சொல்வது என்ன?

2019-ம் ஆரம்பித்த கொரோனா பெருந்தொற்றினால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் வறுமைக்குத் தள்ளப்பட்டனர். இதனால், நாள்பட்ட பசியினால் சிக்கித் தவிப்போர் ஏராளம். 

2005-ம் ஆண்டுக்குப் பின், நாள்பட்ட பசியினால் சிக்கித் தவித்தோரின் எண்ணிக்கை குறைந்து வந்தாலும், இந்த பெருந்தொற்று காலத்தில் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாக சமீபத்திய ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.

நாள்பட்ட பசியினால் பாதிக்கப்படுவோர்களுக்கு ஊட்டச்சத்துக் குறைபாடு அதிகரிப்பதும் தெரியவந்துள்ளது. உலக உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து (The State of Food Security and Nutrition in the World 2021) அறிக்கையின் படி, உலகளவில் கொரோனா பாதிப்புக்குப் பின், 2020-ம் ஆண்டில் சுமார் 81.1 கோடி மக்கள் ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை கடந்த 2019-ம் ஆண்டைக் காட்டிலும் 10 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

உலகளாவிய பாதிப்பில், ஆசியப் பகுதிகளில் அதிக மக்கள் நாள்பட்ட பசியினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். அதாவது, கடந்த 2019-ல் 36.13 கோடி பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 2020-ம் ஆண்டில் 41.80 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

image

புள்ளிவிவரங்களின் படி பார்த்தால், ஆசியப் பகுதிகளில் 2015-ல் இருந்து 2019 வரை லட்சங்களில் அதிகரித்து வந்த எண்ணிக்கை, கொரோனா பாதிப்புக்குப் பின் 5 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆப்பிரிக்க நாடுகளைப் பொருத்தவரை, 2019-ல் 23.53 கோடி மக்களாக இந்த எண்ணிக்கை 2020-ல் 28.16 கோடியாக உயர்ந்துள்ளது. லத்தீன் அமெரிக்க நாடுகளில் 4.59 கோடியாக இந்த எண்ணிக்கை 2020-ல் 5.97 கோடியாக அதிகரித்துள்ளது.

கொரோனா பேரிடர், காலநிலை மாற்றம் போன்ற பாதிப்புகள் 2022-ம் ஆண்டுகளிலும் அதிகரிக்கும் என உலகவங்கியும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த இக்கட்டான காலகட்டத்தில் அத்தியாவசிய பொருட்கள், உணவுப் பொருட்கள் என அவற்றின் விலையும் 20% அதிகரித்துள்ளது.

தற்போதைய சூழலில், வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள மக்கள், உண்ண உணவு கிடைத்தாலே போதும் என இருக்கின்றனர். ஆனால், அந்த உணவு தரமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கிறதா என யோசிப்பதில்லை. எனவே ஒவ்வொரு மனிதனுக்கும் ஊட்டச்சத்து மிக்க தரமான உணவு கிடைக்க, அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அரசுகளின் கடமை.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்