Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

“எங்களைத் தாண்டித்தான் தம்பி சூர்யாவை நெருங்க முடியும்” - பாஜகவிற்கு சீமான் எச்சரிக்கை

ஒளிப்பதிவு சட்டத் திருத்தற்கு எதிர்ப்பு தெரிவித்த நடிகர் சூர்யாவிற்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது ட்விட்டர் பக்கத்தில் பாஜக-விற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள ஒளிப்பதிவு சட்டத் திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் உள்ள சினிமா நட்சத்திரங்கள் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில், இந்த சட்டத்திற்கு எதிராக நடிகர் சூர்யா தனது கருத்தை பதிவு செய்திருந்தார். இதை எதிர்த்த தமிழக பாஜக இளைஞர் அணி நடிகர் சூர்யாவிற்கு எதிராக கண்டன தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறது.

image

இந்நிலையில் பாஜகவை எதிர்த்தும் நடிகர் சூர்யாவிற்கு ஆதரவாகவும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குரல் கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “எங்களைத் தாண்டித்தான் தம்பி சூர்யாவை நெருங்க முடியும். தம்பி சூர்யா தனியொரு நபரென நினைத்துக் கொண்டு, மத்தியில் இருக்கும் அதிகாரப்பின்புலத்தைக் கொண்டு அவரை அச்சுறுத்தவோ, மிரட்டவோ முனைந்தால் அது மோசமான எதிர்விளைவுகளைத் தருமென எச்சரிக்கிறேன்.” என அறிக்கை ஒன்றை பதிவிட்டுள்ளார்.

மேலும், “திரைக்கலைஞர்கள் சமூகத்தின் ஓர் அங்கம்தான். அவர்களும் மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் குரலெழுப்ப வேண்டுமெனும் தார்மீகப் பொறுப்புணர்ந்து அநீதிக்கெதிரான தனது அறச்சீற்றத்தை தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வரும் தம்பி சூர்யாவின் நெஞ்சுரமும், துணிவும் போற்றுதற்குரியது; கருத்துச்சுதந்திரத்தின் குரல்வளையை நெரிக்கும் வகையில் கொண்டு வரப்பட்டிருக்கிற இச்சட்டத்திருத்தத்தை எதிர்க்க வேண்டியதன் அவசியத்தையும், அதனுள்ளிருக்கும் பெரும் ஆபத்தினையும், உள் அரசியலையும் உணர்ந்து தனது ஆழ்மனக்குமுறலை வெளிப்படுத்தியிருப்பது மிக நேர்மையானது. அதனை உளப்பூர்வமாக வரவேற்கிறேன். அவரது இந்நிலைப்பாட்டுக்கு நாம் தமிழர் கட்சி உறுதுணையாக நிற்குமென உறுதியளிக்கிறேன். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்