Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

பிரதமர் மோடி அமைச்சரவை விரிவாக்கம்: புதிய மத்திய அமைச்சர்கள் முன் உள்ள சவால்கள் என்னென்ன?

புதிதாக பொறுப்பேற்றிருக்கும் முக்கிய துறைகளைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் முன் உள்ள சவால்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

திரைத்துறையினர் மத்தியில் எதிர்ப்பு எழுந்திருக்கும் வரைவு ஒலிப்பதிவு மசோதாவை கையாள்வது கொரோனா சூழலில் நீட் தேர்வு குறித்த முடிவும், மேல்நிலை கல்வி ஆணையம் உள்ளிட்டவை அடங்கிய தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதும் மத்திய கல்வித்துறை அமைச்சராக பதவியேற்றுள்ள தர்மேந்திர பிரதானுக்கு முன் உள்ள சவால்களாக பார்க்கப்படுகிறது.

கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலை குறைந்து வரும் நிலையில் கேரளா, மகாராஷ்டிரா போன்ற சில மாநிலங்களில் பாதிப்பு தீவிரத்துடன் இருந்து வருகிறது. மூன்றாவது அலையும் மிரட்டி வரும் நிலையில் சுகாதாரத்துறை அமைச்சராக பதவியேற்றிருக்கிறார் மன்சுக் மாண்டவியா. தடுப்பூசி விநியோகம், ஆக்சிஜன் மற்றும் மருத்துவமனையில் படுக்கைகள் இருப்பதை உறுதி செய்வது தற்போது அவர் முன் உள்ள சவாலாக இருக்கிறது.

ரயில்வே துறை அமைச்சராக பதவியேற்றுள்ள அஷ்வினி வைஷ்ணவ், நாட்டில் தனியார் பயணிகள் ரயில்களை அனுமதிப்பது தொடர்பான ஏலம், ரயில்வே சொத்துகள் மற்றும் CONCOR பொதுத்துறை நிறுவனத்தில் உள்ள அரசின் பங்குகளை விற்பது மற்றும் அகமதாபாத் - மும்பை புல்லட் ரயில் திட்டத்தை விரைவுப்படுத்துவதற்கு முக்கியத்துவம் தரவேண்டிய சூழல் உள்ளது. தகவல் தொழில்நுட்பத்துறையும் கவனிக்கும் அவர், புதிய தகவல் தொழில்நுட்ப சட்டத்தால் மத்திய அரசுடன் முரணாக இருக்கும் சமூக ஊடக நிறுவனங்களுடனான உறவை வலுப்படுத்துவதும், சுமார் மூன்றரை லட்சம் கிராமங்களில் செயல்படுத்தப்படவுள்ள பாரத்நெட் திட்டத்திற்கு ஊக்கமளிப்பதும் முக்கியமானதாக இருக்கிறது.

பெட்ரோலியம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறையை கவனிக்கும் ஹர்தீப் புரி-க்கு, தினமும் உயர்ந்து வரும் பெட்ரோலிய பொருட்களின் விலையை கட்டுப்படுத்துவதுதான் முதன்மையானதாக சவாலாகும்.

விமான போக்குவரத்துத்துறை அமைச்சராக உள்ள ஜோதிராதித்ய சிந்தியா, நாடு முழுவதும் ஒரேமாதிரியான பயண விதிகள் மற்றும் கொரோனாவால் முடங்கி இருக்கும் சர்வதேச விமான சேவையை மீண்டும் இயக்குவதும் சவாலாக பார்க்கப்படுகிறது.

சட்டத்துறை அமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் கிரண் ரிஜிஜூ, உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் மற்றும் கீழமை நீதிமன்றங்களில் உள்ள அதிகளவிலான நீதிபதிகளின் காலியிடங்களை நிரப்புவதையும், நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 4.5 கோடியை எட்டியுள்ள நிலையில் அனைத்து நீதிமன்றங்களையும் டிஜிட்டல் தொழில்நுட்பத்துக்கு மாற்றுவதையும் விரைவுப்படுத்த வேண்டியுள்ளது.

தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் அனுராக் சிங் தாக்குர், திரைத்துறையினர் மத்தியில் எதிர்ப்பு எழுந்திருக்கும் மத்திய அரசின் வரைவு ஒலிப்பதிவு மசோதாவை கையாள்வது பெரிய சவாலாக உள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்