Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

மதுரை மாவட்டத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று

மதுரை மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் இரு நாட்களாக தொற்று அதிகரித்து வருகிறது.

கொரோனா நோய்த் தொற்று பரவல், முழு ஊரடங்கு மற்றும் கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டது. மதுரை மாவட்டத்தில் இதுவரை 72,460 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 70,620 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மதுரையில் கொரோனா தொற்றால் 1,113 பேர் இறந்துள்ள நிலையில், தற்போது 727 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதில், 301 பேர் ஆக்சிஜன் வார்டிலும், 146 பேர் சாதாரண வார்டிலும் ,110 பேர் ஐ.சி.யு.,விலும், 84 பேர் கோவிட் கேர் சென்டரிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

image

இந்த நிலையில் ஜூன் 28-ம் தேதி முதல் ஜூன் 30-ம் தேதி வரை தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 80-ல் இருந்து 70 ஆக குறைந்திருந்த நிலையில், நேற்று முன்தினம் 94 பேருக்கும், நேற்று 85 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன் மூலம் மதுரை மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. மதுரை மாவட்டத்தில் இதுவரை 8 லட்சத்து 35 ஆயிரத்து 982 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்