Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

கருத்து சுதந்திரம் எங்கே? சென்சார் போர்டு ஏன் உள்ளது?- விஷாலின் காட்டமான கேள்விகள்

சினிமா துறையை எப்போதும் குறிவைப்பது ஏன்? என அடுக்கடுக்காக கேள்வியெழுப்பியுள்ளார் நடிகர் விஷால்.
 
ஒளிப்பதிவு திருத்த மசோதா கடந்த 2019-ஆம் ஆண்டு மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டு, பின்னர் அது நிலைக் குழுவிற்கு அனுப்பப்பட்டது. நிலைக்குழு கடந்தாண்டு மார்ச் மாதம் அறிக்கையை சமா்ப்பித்தது. தற்போது மீண்டும் 2021-இல் இந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.
 
இந்தத் திருத்தச் சட்டப்படி ஒரு முறை தணிக்கைக்கு உள்ளான திரைப்படங்கள் மீண்டும் தணிக்கை செய்ய கோர முடியும். மேலும், திரைப்பட திருட்டுகளுக்கு கடுமையான சிறை தண்டனை, அபராதம் ஆகியவை விதிக்கப்பட உள்ளன. இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில நாள்களாக திரைப்படத் துறையினர் கருத்துகளை தெரிவித்து வருகின்றனா்.
 
இந்நிலையில் ஒளிப்பதிவு வரைவு மசோதாவுக்கு நடிகர் விஷால் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவரது ட்விட்டர் பதிவில், ''பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் எங்கே? தணிக்கை வாரியம் ஏன் உள்ளது? பரபரப்பான செயல்முறை ஏன்? சினிமா துறையை எப்போதும் குறிவைப்பது ஏன்? முதலில் ஜிஎஸ்டி, பின்னர் பைரசிக்கு எதிராக எந்த நடவடிக்கையும் இல்லை. இப்போது ஒளிப்பதிவு திருத்த மசோதா. இந்தச் சட்டத்தைக் கொண்டுவருவது நியாயமில்லை'' என்று அவர் கூறியுள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்