Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

சகல வசதிகளுடன் களமிறங்க காத்திருக்கும் 'ஐபோன்-13' - ஓர் அறிமுகம்

ஒவ்வொரு ஆண்டும் ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தும் புதிய மாடல் போன்கள் ஒட்டுமொத்த டெக் உலகினர் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். அந்தவகையில், ஆப்பிளின் 13-வது Generation போன்கள் செப்டம்பரில் விற்பனைக்கு வரவுள்ளன.

ஆப்பிள் நிறுவனத்தின் World Wide Developers Conference சமீபத்தில் நடந்து முடிந்தது. அதில் வெளியிடப்பட்ட IOS15 இயங்குதளம் குறித்த அறிவிப்புகள் டெக் உலகின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், தற்போது அடுத்தமாதம் விற்பனைக்கு வரவுள்ள ஐபோன் -13 பேசு பொருளாகியிருக்கிறது. 13 Mini, 13, 13 Pro, 13 Pro Max என நான்கு அளவுகளில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த போன்கள், பல்வேறு வண்ணங்களில் கிடைக்கும்.

iPhone 13 rumors: A buzzy new render gives us clues about its camera bump - CNET

2020-ல் வெளியான ஐபோன் -12 விற்கும் ஐபோன் -13-க்கும் பெரியளவில் வேற்றுமைகள் இருக்காது என சொல்லப்படும் நிலையில், புதிய மாடலில் கேமராக்களின் தரம் Ultra Wide Lens மற்றும் Periscopic Lens உடன் மேம்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல், LED திரையின் வேகத்தை கட்டுப்படுத்தும் Refresh Rate இதுவரையான மாடல்களில் 60 Frames per second என இருந்தது. அது 120 Hz ஆக மாற்றப்படுவதற்கு அதிக வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.

அதற்கேற்ப, அதிவேகமாக செயல்படும் A15 Bionic Chip Processor புதிய மாடலில் இடம்பெற உள்ளது. மேலும், ஐபோன் -8க்குப் பிறகான மாடல்களில் Fingerprint Sensor இடம்பெறாதது பயனாளர்கள் மத்தியில் பெரும் குறையாக இருந்துவந்தது. அதனை போக்கும் வகையில் 13-ல் Face ID உடன் Fingerprint Sensor இடம்பெறுகிறது. அதேபோல், Notches அளவும் குறைக்கப்பட்டுள்ளது. Iphone 13-ஐ Wireless Charger, lighthning cable மூலமாக சார்ஜ் செய்து கொள்ளலாம். அதே நேரம், முந்தைய மாடல்களை காட்டிலும் அதிக நேரம் பயன்படுத்துவதற்கு ஏற்ப பேட்டரியின் தரமும் உயர்த்தப்பட்டுள்ளது.

செப்டம்பர் 24-ம் தேதி முதல் விற்பனைக்கு வரவுள்ள ஐபோன் -13ன் விலை 70 ஆயிரம் ரூபாயில் இருந்து தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலில் அமெரிக்காவிலும், சில வார இடைவெளியில் மற்ற நாடுகளிலும் ஐபோன் -13 விற்பனை வரும்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்