Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

உத்தராகாண்ட், மகாராஷ்டிராவில் கனமழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மகாராஷ்டிரா, உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களில் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

உத்தராகண்ட் மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் கனமழை காரணமாக, மாநகராட்சிக்கு சொந்தமான கட்டடம் ஒன்றின் சுவர் இடிந்து விழுந்தது. அங்கு நிறுத்தப்பட்டிருந்த 8 இருசக்கர வாகனங்கள் சேதமாகின. தானே மற்றும் பல்கர் ஆகிய மாவட்டங்களில் வெவ்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்தன. இதே போன்று பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. மும்பையில் பலத்த மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

image

மீண்டும் பலத்த மழை பெய்துவருவதால் நாசிக், செம்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கி இருப்பதை காண முடிகிறது. அம்பெர்மாலி ரயில் நிலையத்திற்குள் தண்ணீர் புகுந்தது. இதனால், இகத்புரியா,கார்தி இடையேயான ரயில் சேவை நிறுத்தப்பட்டது. உத்தராகண்ட் மாநிலத்தில் தனக்பூர்-காட் தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது.

இதில், 24க்கும் மேற்பட்டோர் சிக்கினர். இதனிடையே மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி பார்வையிட்டார். நிலச்சரிவு நடந்த இடத்தில் வசித்து வந்த 150 பேர் பத்திரமாக வெவ்வேறு இடங்களில் தங்க வைத்துள்ளதாக பேரிடர் மேலாண்மை அதிகாரி தெரிவித்துள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்