மதுரையில் நடமாடும் கொரோனோ தடுப்பூசி சேவையை ஆட்சியர் அனிஷ் சேகர் துவக்கி வைத்தார்.
மதுரையில் சி.ஐ.ஐ, எங் இண்டியன்ஸ் பங்களிப்புடன் மாநகராட்சி, மாவட்ட நிர்வாகத்தின் ஏற்பாட்டில் கொரோனோ தடுப்பூசி நடமாடும் ஊர்தி சேவையை மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர், மாநாகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்நிகழ்வில் எம்.எல்.ஏ தளபதி மற்றும் தன்னார்வலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்த நடமாடும் ஊர்தி மூலம் நாள்தோறும் அதிபட்சமாக 300 பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகள், காய்கறி சந்தைகள் மற்றும் கிராமப்புற பகுதிகளுக்கு சென்று தடுப்பூசி செலுத்த நடமாடும் தடுப்பூசி ஊர்தி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் காலை முதல் மாலை வரை பணிச்சுமையில் இருப்பவர்களின் பணிபுரியும் இடங்களுக்குச் சென்று தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சேவை பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்