Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

இந்தியாவின் முதல் கொரோனா நோயாளிக்கு, ஒன்றரை வருடத்துக்குப் பின் மீண்டும் கொரோனா உறுதி

இந்தியாவில் முதன்முதலாக கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டிருந்த பெண்ணுக்கு, ஒன்றரை வருடத்துக்குப் பிறகு தற்போது இரண்டாவது முறையாக கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்படுள்ளது.

அவருக்கு ஆன்டிஜென் சோதனையில் நெகடிவ் என்றும்; ஆர்.டி.பி.சி.ஆர் சோதனையில் பாசிடிவ் என்று வந்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. அறிகுறிகளற்ற கொரோனாவே அவருக்கு இருப்பதனால், தற்போது அவருக்கு வீட்டுத்தனிமை பரிந்துரைக்கப்பட்டிருப்பதாகவும், அவர் நலமுடன் இருப்பதாகவும் திருச்சூர் மாவட்ட மருத்துவ அலுவலர் ரீனா தெரிவித்துள்ளார்.

How India ramped up its covid-19 testing facilities

ஆன்டிஜென் பரிசோதனையில் ஒரு முடிவும், ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனையில் வேறொரு முடிவும் வந்திருப்பதை தொடர்ந்து, அவருடைய மாதிரிகள் டெல்லி ஆய்வகத்துக்கு மேற்கொண்ட ஆய்வுக்கு அனுப்பப்பட்டிருப்பதாக சொல்லப்பட்டுள்ளது.

வூஹான் பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டு மருத்துவப் படிப்பு படித்துவந்த இவர், செமஸ்டர் விடுமுறைக்காக கடந்த ஜனவரி 30, 2020 -ல் கேரளாவிலிருந்த தனது வீட்டுக்கு வந்திருந்தார். அடுத்தடுத்த நாட்களில், அவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்தது. அந்தவகையில் இந்தியாவில் தொற்று உறுதிசெய்யப்பட்ட முதல் நபர், அவராகத்தான் இருந்தார். தொற்று உறுதியானதைத் தொடர்ந்து, திரிச்சூர் மருத்துக்கல்லூரி மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

Government Medical College, Thrissur - Wikipedia

3 வார தொடர் சிகிச்சைக்குப் பிறகு, அவருக்கு கொரோனா நெகடிவ் என்றானது. இருமுறை சோதனை செய்யப்பட்டு நெகடிவ் என வந்தபிறகு பிப்ரவரி 2020ல், அவர் நலமுடன் வீடு திரும்பியிருந்தார்.

இந்நிகழ்வுக்குப்பிறகு, இப்போது இன்று (ஜூலை 13) அவருக்கு மீண்டுமொருமுறை கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்