இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களிடம் ஆர்டிபிசிஆர் பரிசோதனை சான்று கேட்க வேண்டாம் என மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகம் சார்பில் மாநில அரசுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில், பிற மாநிலங்களில் இருந்து வரும் மக்களில் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களிடம் ஆர்டிபிசிஅர் பரிசோதனையை கேட்க வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு பதிலாக தடுப்பூசி சான்றிதழை ஆவணமாக கொண்டு அவர்களை மாநிலத்திற்குள் அனுமதிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்து கட்டுப்பாடுகளில் ஒரே நடைமுறையை பின்பற்றவும் மத்திய அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்