காவல் துறையில் 1,33,198 பணியிடங்களில் காலியாக உள்ள 14,317 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில், பொது பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த பட்ஜெட்டில் துறைவாரியான நிதி ஒதுக்கீடு என பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.
* விபத்துகளை தடுக்க, ஒருங்கிணைந்த சாலை பாதுகாப்பு இயக்கம் மாற்றியமைக்கப்படும்.
* சாலை பாதுகாப்பு திட்டத்திற்காக பல்வேறு துறைகளுக்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு.
* நீதித்துறைக்கு ரூ.1,713.30 கோடி நிதி ஒதுக்கீடு.
* காவல் துறைக்கு ரூ.8,930 கோடி நிதி ஒதுக்கீடு. தமிழக காவல்துறையின் தரம் மீட்டெடுக்கப்படும். காவல் துறையில் 1,33,198 பணியிடங்களில் காலியாக உள்ள 14,317 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.
* தீயணைப்புத் துறைக்கு ரூ.405.13 கோடி நிதி ஒதுக்கீடு. தீயணைப்புத் துறையில் பணிபுரிவோருக்கு போதிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படும்.
* எந்த வகையான பேரிடரையும் சந்திக்கும் நிலையில் மாநிலம் உள்ளதை உறுதிசெய்வோம். பேரிடர் விளைவுகளை கண்டறிந்து அவற்றை குறைக்கும் அணுகுமுறை உருவாக்கப்படும். 4,133 இடங்கள் அதிக வெள்ளப் பாதிப்புக்கு ஆளாகும் இடங்களாக கண்டறியப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
* முழுமையான தகவல்களுக்கு > தமிழ்நாடு பட்ஜெட் 2021-22 முக்கிய அம்சங்கள்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்