இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்துள்ளது.
இன்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து 4,380 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதன்படி, சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.35,040க்கு விற்பனையாகிறது. தொடர்ச்சியாக 4 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு 1,208க்கு குறைந்துள்ளது நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், வெள்ளி விலை கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.69க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.69,000க்கும் விற்பனையாகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்