போதிய சட்ட பாதுகாப்புகள் இருந்த போதும் நம் நாட்டில் கைதிகள் மீதான காவல் துறையினரின் கொடுமைகள் தொடரத்தான் செய்கின்றன என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்துள்ளார்
டெல்லியில் நடைபெற்ற தேசிய சட்ட உதவி சேவைகள் ஆணைய நிகழ்ச்சியில் பேசுகையில் தலைமை நீதிபதி இவ்வாறு குறிப்பிட்டார். நமது சமூகத்தில் காவல் துறையினரின் கொடுமைகளும் சிறைக் கொடுமைகளும் நீடிப்பதாக வேதனை தெரிவித்தார். சட்ட ரீதியாக ஏராளமான ஏற்பாடுகள் இருந்த போதிலும் கொடுமைகளை தடுத்து நிறுத்த முடியவில்லை என்றும் தலைமை நீதிபதி தெரிவித்தார். விசாரணைக்கு உள்ளான அல்லது கைதான நபருக்காக வாதாட உரிய வசதிகள் இல்லாததே இந்நிலைக்கு காரணம் என்றும் தலைமை நீதிபதி ரமணா தெரிவித்தார்.
விசாரணைக்கு உட்படுத்தப்படும் அல்லது கைதான நபருக்கு சட்ட ரீதியாக வழங்கப்படும் உதவிகள் குறித்த விவரங்கள் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் சிறையிலும் அனைவர் கண்ணிலும் படும்படி வைக்க வேண்டும் என்றும், அப்போது இப்பிரச்னைக்கு தீர்வு கிடைக்க கூடும் என்றும் தலைமை நீதிபதி ரமணா தெரிவித்தார்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்