தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்களுக்கு இன்று ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
பொறியியல், கலை, அறிவியல் கல்லூரிகள் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் முதலாமாண்டு தவிர மற்ற மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடங்கியுள்ளன. முன்னதாக ஆகஸ்ட் 9ஆம் தேதி முதல் பேராசிரியர்கள் கட்டாயம் கல்லூரிக்கு வர வேண்டும் என உயர்கல்வித் துறை செயலாளர் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இதனையடுத்து இணைய வழியில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. பேராசியர்கள் கல்லூரிக்கு வரவழைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்