தமிழக நிதியமைச்சர் பெயரில் போலி மின்னஞ்சல் முகவரியை உருவாக்கி அவதூறு பரப்பியவர்கள் மீது 7 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பெயரில் அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் போலி மின்னஞ்சல் முகவரியை உருவாக்கி, இஸ்லாமியர்களைப் பற்றி அவதூறான கருத்துகளை பதிவிட்டு அரசியல் சாராத இஸ்லாமியர்களுக்கு அனுப்பி வருகின்றனர்.
இந்த விஷம செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், போலி மின்னஞ்சலை நீக்கக்கோரியும் அமைச்சர் சார்பில் சென்னை அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
அதன்பேரில், அபிராமபுரம் போலீசார் 153(ஏ) மதம், இனம் அடிப்படையில் இரு பிரிவினரிடையே பகைமையை தூண்டுதல், 295(ஏ) ஒரு மதத்தினரின் நம்பிக்கையை வேண்டுமென்றே புண்படுத்துதல், 465 பொய்யான ஆவணங்கள் தயாரித்தல், 467 - மதிப்புமிக்க பாதுகாப்பு, உயில் போன்றவற்றை போலி ஆவணங்கள் தயாரித்தல், 500 - அவதூறு பரப்புதல், 34 - உட்கருத்துடன் செய்யப்படும் செயல்கள், தகவல் தொழில்நுட்ப சட்டம் பிரிவு 66 என ஏழு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்