Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

எஸ்.பி.வேலுமணி வீட்டில் ரெய்டு டூ போராட்டக்காரர்களுக்கு உணவு பொட்டலங்கள் - டைம்லைன்

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீடு மற்றும் அவருடன் தொடர்புடைய 53 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். பதவியை தவறாக பயன்படுத்தி முறைகேடு செய்ததாக அளிக்கப்பட்ட புகாரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிகாலையிலிருந்து நடந்த நிகழ்வுகளின் தொகுப்புகளை பார்க்கலாம்.

அதிகாலை 7.30மணி: கோவை குனியமுத்தூரில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்த தொடங்கினர். உள்ளாட்சித்துறையில் வழங்கப்பட்ட டெண்டர்களில் நடந்த முறைகேடு, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது உள்ளிட்ட புகாரின் எதிரொலியாக ரெய்டு நடத்தப்பட்டது.

image

அதிகாலை 7.40மணி: எஸ்.பி.வேலுமணி வீடு மற்றும் அவருடன் தொடர்புடைய 10க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை; சென்னை கோடம்பாக்கத்தில் வேலுமணிக்கு நெருக்கமான நபர் வீட்டிலும் சோதனை தொடங்கியது.

அதிகாலை 7.50 மணி : சென்னையில் 15க்கும் மேற்பட்ட இடங்களில் ரெய்டு; காஞ்சிபுரம், திண்டுக்கல் ஆகிய இடங்களில் சோதனை

தமிழகத்தில் 52 இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது. கோவையில் 35 இடங்களிலும், சென்னையில் 15 இடங்களிலும், காஞ்சிபுரம் -1, திண்டுக்கலில் ஒரு இடத்திலும் சோதனை

காலை 8.10 மணி: கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என நூற்றுக்கணக்கானோர் கோவையில் உள்ள எஸ்.பி.வேலுமணி வீட்டிற்கு முன் குவியத்தொடங்கினர்.

காலை 8.20 மணி: எஸ்.பி.வேலுமணி, அவரது சகோதரர் அன்பரசன் உள்ளிட்ட 17 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது.

காலை 8.25 மணி: அதிமுக தொண்டர்கள் போராட்டம் தொடக்கம். குனியமுத்தூரில் உள்ள எஸ்.பி.வேலுமணி வீட்டிற்கு முன் குவிந்த கட்சி நிர்வாகிகள், உறவினர், தொண்டர்கள் , ''சோதனைக்கு அஞ்ச மாட்டோம்'' என முழக்கம். சாலையில் அமர்ந்து பெண்கள் போராட்டம். ஏராளாமான காவல்துறையினர் குவிப்பு.

காலை 8.40மணி: கோவை எஸ்.பி.வேலுமணி வீட்டிற்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வருகை. தொண்டர்கள் முழக்கங்களை எழுப்பி தங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்தனர்.

காலை 8.50 மணி: சென்னை சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் விடுதியில் இருந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் தீவிர விசாரணை தொடக்கம்.

காலை 9.20 மணி: கோவையில் சோதனை நடக்கும் எஸ்.பி.வேலுமணி வீட்டு முன்பு அதிமுகவினர் ரகளையில் ஈடுபட்டனர். போலீசார் கொண்டு வந்த இரும்பாலான தடுப்பை அதிமுகவினர் கைப்பற்றி தூக்கிச்சென்றனர்.

image

காலை 9.25 மணி: சென்னையில் வேலுமணியிடம் விசாரணை நடக்கும் எம்.எல்.ஏ விடுதி முன்பு அதிமுகவினர் தள்ளுமுள்ளு; கோவையில் வேலுமணி வீட்டின் முன்பு அமர்ந்து தொண்டர்கள் தர்ணா; தடுப்புகளை அமைக்க ஏற்பாடுசெய்த காவல்துறையினர் தடுப்புகளை தூக்கிச் சென்ற அதிமுகவினர்.

காலை 9.30மணி: அதிமுக எம்எல்ஏக்கள் காவல்துறையினரிடம் பேச்சு. சென்னை, கோவையில் காவல்துறையினரிடம் எஸ்.பி.வேலுமணி ஆதரவாளர்கள் வாக்குவாதம்.

காலை 10.20 மணி: சென்னை எம்.எல்.ஏ விடுதிக்கு முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம், பெஞ்சமின் வருகை.
3 ஆண்டுகளில் கேசிபி நிறுவனத்தின் சொத்து மதிப்பு 967% உயர்ந்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறைதகவல்

காலை 11.30மணி: போராட்டக்காரர்களுக்கு உணவு பொட்டலங்கள், தண்ணீர் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. ஆர்பாட்டத்தை தணிக்க காவல்துறையினர் முயற்சி.

நண்பகல் 12.20மணி: வேலுமணிக்கு நெருக்கமான கேசிபி நிறுவன நிர்வாக இயக்குநர் சந்திரபிரகாஷ் கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதி

நண்பகல் 12.25மணி: கோவை மாட்ட மதுக்கரை நகர அதிமுக செயலாளரும், எஸ்.பி.வேலுமணியின் மைத்துனருமான சண்முகராஜா வீட்டில் ரெய்டு

image

நண்பகல் 12.40மணி: கோவையில் வேலுமணி நண்பர் சந்திரசேகர் வீட்டில் தங்க நகைகள் மதிப்பிடும் பணி

மதியம் 1.10 மணி: ''அதிமுக முன்னாள் அமைச்சர்களை குறிவைத்து பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம்" என அதிமுக தலைமை அறிக்கை

பிற்பகல் 3.00மணி வரை சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்