Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

அரியலூர்: இரவில் பாதை தெரியாமல் இருசக்கர வாகனத்துடன் கிணற்றில் விழுந்த இளைஞர் உயிரிழப்பு

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே, இரவு நேரத்தில் வழிதெரியாமல் இருசக்கர வாகனத்துடன் கிணற்றில் விழுந்த இளைஞர் உயிரிழந்தார். அவருடன் சென்ற இளம்பெண் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புதுச்சாவடி கிராமத்தின் தைலமரக் காட்டுப்பகுதியில் இருசக்கர வாகனத்துடன் இருவர் கிணற்றில் விழுந்ததைக் கண்ட அப்பகுதி மக்கள், தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புத் துறையினர், இருவரையும் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருசக்கர வாகனத்தை ஓட்டிவந்த இளைஞர் மோகன்ராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்