Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவர் பதவி: ராகுல் டிராவிட் விண்ணப்பம்

தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவர் பதவிக்கு இப்போது அந்தப் பொறுப்பில் இருக்கும் முன்னாள் இந்திய வீரர் ராகுல் டிராவிட் மீண்டும் விண்ணப்பித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தேசிய கிரிக்கெட் அகாடமி பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இதற்கு தலைவராக ராகுல் டிராவிட் உள்ளார். இவரது இரண்டு ஆண்டு பதவிக்காலம் முடிவடைவதையொட்டி, அப்பதவிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என பி.சி.சி.ஐ. தெரிவித்திருந்தது. அதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 15 ஆம் தேதி எனத் தெரிவித்திருந்தது.

image

ஆனால் ராகுல் டிராவிட்டை தவிர்த்து மற்ற யாரும் விண்ணப்பிக்கவில்லை. இதனால் விண்ணப்பம் அனுப்புவதற்கான காலக்கெடுவை மேலும் சில நாட்களுக்கு பி.சி.சி.ஐ. நீட்டித்துள்ளது. டி20 உலகக்கோப்பையுடன் ரவி சாஸ்திரி இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பதவியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். அந்த பதவிக்கு ராகுல் டிராவிட் செல்ல வாய்ப்புள்ளதாக கூறப்பட்ட நிலையில் அவர் தேசிய கிரிக்கெட் அகாடமி தலைவர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்