அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, பாஜகவில் இணைகிறாரா என்ற கேள்விக்கு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதிலளித்துள்ளார். கட்சியில் பிரச்னை இருக்கும்போது சிலர் பாஜகவுக்கு வருவதாக அவர் கருத்து தெரிவித்தார்.
இதுகுறித்து பேசிய அவர், “யூகங்களுக்கு பதில் அளிக்க முடியாது. மாற்றத்தை கொடுக்க நினைப்பவர்கள் பாஜகவில் இணையலாம். பாஜகாவில் யார் இணைந்தாலும் மகிழ்ச்சி தான். தேசியம் என்ற சித்தாந்தத்தின் அடிப்படையில் பாஜகவிற்கு வரவும். கட்சிக்குள் பிரச்னை இருக்கும் போது சிலர் பாஜகவிற்கு வருகிறார்கள். மக்களுக்கு வேலை செய்ய விரும்புபவர்களுக்கு பாஜக வாய்ப்பளிக்கும்” என்றார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்