ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 2020 ஒலிம்பிக் விளையாட்டு போட்டி திருவிழா திட்டமிட்டப்படி நடத்தப்பட்டு நிறைவடைந்துள்ளது. 206 நாடுகளை சேர்ந்த ஒலிம்பிக் அணிகள், 11,326 வீரர்கள், 33 விளையாட்டில் 339 ஈவெண்ட்கள், 16 நாட்கள் இந்த ஒலிம்பிக் நடந்து முடிந்துள்ளது.
கொரோனா தொற்று பரவல் காரணமாக 2020-இல் நடத்தப்பட வேண்டிய ஒலிம்பிக்கை 2021-இல் நடத்துவது என திட்டமிடப்பட்டது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒலிம்பிக் நடத்துவது வழக்கம். அந்த வகையில் 2024 ஒலிம்பிக், பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற உள்ளது.
சரியாக 2024-ஆம் ஆண்டு ஜூலை 26 அன்று தொடங்க உள்ளது. 32 விளையாட்டுகளில் 329 போட்டிகள் நடைபெற உள்ளது. சுமார் 10,500 விளையாட்டு வீரர்கள் இதில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சரியாக 1082 நாட்களில் இந்த ஒலிம்பிக் ஆரம்பமாக உள்ளது. அதாவது அடுத்த 2 வருடம், 11 மாதம் மற்றும் 2 வாரத்தில் இந்த ஒலிம்பிக் ஆரம்பமாக உள்ளது.
இதற்கு முன்னதாக 1900 மற்றும் 1924-இல் பாரிஸ் நகரில் ஒலிம்பிக் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்