Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

பட்டியலின சமூகத்தினரை இழிவாக பேசியதாக புகார்: நடிகை மீரா மிதுன் மீது வழக்குப்பதிவு

பட்டியலின சமூகத்தினரை சமூக வலைத்தளத்தில் இழிவாக பேசி வீடியோ வெளியிட்டதாக நடிகை மீரா மிதுன் மீது அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அவர் மீது 7 பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

மாடல் அழகியாக இருந்து நடிகையானவர் மீரா மிதுன். பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார். இவர் அண்மையில் பட்டியலின சமூகத்தினரை இழிவாக பேசி வீடியோ ஒன்றை பகிர்ந்திருந்தார். 

இந்நிலையில் நடிகை மீரா மிதுன் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில், மீரா மிதுன் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல்துறையினர் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்