இந்தியாவிலிருந்து வருபவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கொரோனா கட்டுப்பாடுகளை இங்கிலாந்து தளர்த்தியுள்ளது.
இந்தியாவில் இருந்து இங்கிலாந்து வருபவர்கள் 10 நாட்கள் அரசு கூறும் விடுதியில் கட்டாயம் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளது. அதேநேரம் இந்தியாவில் இருந்து வருபவர்கள் கட்டாயம் அங்கு தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்றும் வீடுகளிலோ அல்லது தமக்கு வசதிப்படும் இடத்திலோ 10 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலிருந்து வருபவர்கள் ஏற்கெனவே ஐரோப்பிய நாடுகளில் தடுப்பூசி செலுத்தியிருந்தால் இங்கிலாந்தில் தனிமையில் இருக்கத் தேவையில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. இது தவிர மேலும் சில தளர்வுகளும் அளிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் ஞாயிற்றுக்கிழமை முதல் அமலுக்கு வந்தன
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்