ஆகஸ்ட் 15 ம் தேதி, கிராம சபை கூட்டம் நடத்துவதற்கு தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது.
மாநிலத்தில் கொரோனா அச்சுறுத்தல் நீடிக்கும் சூழலில், கூட்டம் கூடுவதால் கொரோனா பரவலாம் என்பதை கருத்தில் கொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுதந்திர தினத்தன்று கிராம சபை கூட்டங்களை நடத்த வேண்டாம் என தமிழ்நாடு அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, கிராம பஞ்சாயத்து தலைவர்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் வழங்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை, தமிழ்நாடு அரசு சார்பில் பஞ்சாயத்துராஜ் இயக்குநர் பிரவீன் நாயர் கூறியுள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்